Saturday, September 4, 2010

last days

இது கடைசி காலமா?

இப்பொழுது மிக அதிகமாக கேட்கப்படும் கேள்வி இதுதான். ஹாலிவுட் திரைப்படங்கள் முதல் சுட்டி TV வரை மீடியாக்களை மிகவும் பாதித்திருக்கும் இக்கேள்வி சமீபகாலமாகத்தான் மிகவும் அதிகமாக கேட்கப்படுகிறது. நவீன அறிவியலின் மிகசிறந்த விஞ்ஞானி ராபர்ட் ஹாக்கின்ஸ், “இன்னும் சில நூறு வருடங்களுக்குள்ளாக இவ்வுலகமும் சூரியனும் தவிர்க்க முடியாத பேராபத்துக்களை சந்திக்கவிருக்கின்றது. நாம் ஏதேனும் அண்டை கிரகங்களுக்கு சென்றால்தான் தப்பிப்பிழைக்க வாய்ப்பிருக்கின்றது” என்று கூறுகின்றார். அவர் கூறுவதை உறுதிப்படுத்தும் விதமாக நாம் தினமும் ஒரு புதிய ஆபத்தை கேள்விப்படுகின்றோம். சுனாமி, குளோபல் வார்மிங், சைபர் கிரைம், சூப்பர் பக் இவையெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வரை கேள்விப்பட்டிராத பெயர்கள். ஆனால் இவையெல்லாம் தற்போது நடைபெற்று வருகின்ற பேரழிவுகள்.

ஆக இது கடைசி காலமா? என்ற கேள்விக்கு பதில் தான் என்ன? ஆம். இது கடைசி காலம் தான், ஆனால் பூமிக்கோ மனிதர்களுக்கோ அல்ல. மாறாக காலத்திற்குதான் இது முடிவு காலம். ஆம் வேதம்(பைபிள்) இதை கிருபையின் காலம் என்கிறது. அதாவது கடவுளின் அன்பையும், இரக்கத்தையும், கிருபையையும் பெற்றுக்கொள்ளும் காலம். தெளிவாகக் கூறவேண்டுமானால் இயேசு மனிதனாக இப்பூமியில் பிறந்த நாளிலிருந்து அவர் மீண்டும் வரப்போகும் நாள் வரை உள்ள காலம். அதற்குரிய அடையாளங்கள் தான் மேலே கூறப்பட்டவையாவும். எல்லா மதத்தினரும் எதிர்பார்க்கும் இரட்சகர் (கல்கி அவதாரம், ஈஸா நபி) பூமிக்கு வரும் காலம் இதுதான். வேதம்(பைபிள்) தெளிவாக கூறுகின்றது, இயேசு மறுபடியும் பூமிக்கு வருவார்.(Act.1:11) அப்பொழுது அதுவரை அவருக்காக வாழ்ந்த பரிசுத்தமான பக்தர்களை பரலோகத்திற்கு அவருடன் அழைத்துச்செல்வார்.(Jn14:3) அதன்பிறகு 7 ஆண்டுகள் பிசாசு(சாத்தான்) எனும் தீயசக்தியின் நேரடியான ஆட்சிகாலம் இருக்கும். அது மிகவும் கொடூரமான காலம். அதன் பிறகே முழு உலகமும் பரிசுத்தமாக்கப்பட்டு கடவுளின் ஆட்சி நடைபெறும். வேதத்தில்(பைபிள்) முன்னுரைக்கபட்டபடியே அனைத்தும் சரியாக நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. வேதம்(பைபிள்) என்பது சாதாரண புத்தகம் அல்ல. அது இலவசமாக கொடுக்கப்படுவதால் நம்மில் பலருக்கு அதன் அருமை புரியவில்லை என்பதுதான் உண்மை. கடந்த கால உண்மை வரலாறு மற்றும் நிரூபிக்கப்பட்ட எதிர்கால தீர்க்கதரிசனங்களை தெளிவாக தவறில்லாமல் கொண்ட ஒரே புத்தகம் கிறிஸ்தவ வேதம்(பைபிள்) மட்டுமே!. அதில் கூறப்பட்டுள்ள இயேசு இந்த பூமிக்கு மனித அவதாரமாய் வந்தது உண்மை. அவர் எல்லா மனிதர்களின் பாவங்களுக்காகவும் சிலுவையில் பிராயசித்தமாய் இரத்தம் சிந்தி மரணமடைந்ததும் உண்மை. உயிர்த்தெழுந்து சீஷர்கள் கண்களுக்கு முன்பாக பரலோகத்திற்கு சென்றதும் உண்மை. அதுபோல் அவர் திரும்ப வரப்போவதும் உண்மை.

இயேசு மறுபடியும் வரும்போது அவருடன் செல்பவர்களும், அவருக்காகவே வாழ்ந்து இறந்தவர்களும் மட்டுமே பரலோகம்(சொர்க்கம்) செல்ல முடியும். இயேசு கூறியது: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான்14:6) இயேசுவின் வருகை எப்பொழுது வேண்டுமானாலும் சம்பவிக்கலாம். அவரோடு செல்லவேண்டுமெனில் நாம் அவர் சிந்திய இரத்தத்தினால் பாவமன்னிப்பு பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயேசுவின் இரத்தம் மட்டுமே சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.(1யோவான்1:7) வேறு எந்த புண்ணிய நதியில் மூழ்கினாலும், புண்ணிய தலங்களுக்கு சென்று பரிகாரங்களை செய்தாலும் பாவமன்னிப்பு கிடக்காது. ஏனெனில் நம் பாவங்களுக்காக பரிகார இரத்தம் சிந்திய ஒரே கடவுள் இயேசு மட்டுமே.

அநேகர் நினைப்பது போல் சிலுவையில் அவர் தன்னையே காப்பற்றிக்கொள்ள முடியாத கோழை அல்ல. அவர் மனுக்குலத்தின் பாவங்களுக்காக இரத்தம் சிந்தி பிராயச்சித்த பலியாக மரிப்பதற்காகவே மனிதனாய் பிறந்தவர். அவர் பட்ட பாடுகள், சிந்திய இரத்தம், மரணம் அனைத்தும் நம்மை பாவப்பிடியிலிருந்து விடுதலையாக்கவே. இதைப் படிக்கின்ற உங்களையும் அவர் விடுதலையாக்குவார். உங்கள் வாழ்வில் உள்ள பாவ பழக்கங்கள், தோல்வி, சாபம், செய்வினை அனைத்திலிருந்தும் காப்பாற்றி இரட்சிக்கிறவர் இயேசு மட்டுமே. அந்த இரட்சிப்பை இலவசமாக தருகிறார். நீங்கள் வெட்கப்பட்டலோ, சந்தேகப்பட்டாலோ, அல்லது மற்றவர்களுக்கு பயந்து தயங்கினாலோ அந்த பரலோக வாழ்வை இழந்து விடுவீர்கள். அந்த இரட்சிப்பை பெற்றுக்கொள்வதைக் குறித்து தெரிந்து கொள்ள கீழ்காணும் விலாசத்தில் தொடர்பு கொள்ளுங்கள். இனியும் காலம் செல்லாது.

ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும்(Rev22:20)

மேலும் தெரிந்துகொள்ள:

No comments:

Post a Comment